
கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக நிருவாக கட்டடத்தினை நுளைவாயிலை முற்றுகையிட்ட மாணவர்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் அமர்ந்திருந்தனர்.
கடந்த 15ஆந் திகதி கிழக்குப் பல்லைக் கழகத்தின் கலை காலாசார பீட யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்த டனியல் சில்வேவியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளரார்.
குறித்த மாணவியின் மரண வீட்டிற்குச் செல்வதற்காக கலை காலாசார பீட மாணவர்கள் பீடாதிபதி ஊடாக 16 செவ்வாய்கிழமை போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரமாறு நிருவாகத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெளிநாடு சென்றுள்ளதால் பிரதி உபவேந்தரிடம் குறித்த கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கையினை பல்கலைக் கழக நழருவாகம் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்திருந்தது.
நிருவாகத்தின் இந்த செயற்பாட்டினைக் கண்டித்தும் வருங் காலங்களில் மாணவர்களைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற காரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் - எமது சகோதர மாணவியின் இறுதிச் சடங்கிற்கு செல்வதற்கான மாணவர்களைத் தயார்படுத்தி கடிதம் மூலம் நிருவாகத்திடம் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரியிருந்தோம்.
மாணவர்களுக்கான கல்வி வசதி பல்கலைக் கழகத்தில் உள்ளது ஏனைய வசதிகள் உங்களுக்கு இல்லை மரண வீட்டிற்கு செல்வதாயின் நீங்களாகவே வாகனங்களை பிடித்து செல்லுங்கள் என பல்கலைக் கழக நிருவாகம் அறிவித்திருந்து.
இந்த நிலையில் எமது மாணவர்கள் ஒன்றிணைந்து போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொண்டு மரணச் சடங்கிற்க சென்று வந்தோம்.
மாணவர்களுக்கொன வழங்கப்பட்ட வசதி வாய்ப்புகளை கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகம் அனுபவித்துக்கொண்டு மாணவர்களுக்கான அவசர தேவைகளைக் கூட செய்துதராது அசமந்த போக்கினைக் கடைப்பிடிக்கிறார்கள்.
நிருவாகத்தினர் எதிர்காலத்தில் மாணவர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.