Breaking

Post Top Ad

Wednesday, October 31, 2018

வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண்அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்!



மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் அகழ்வை மேற்கொண்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், அனுமதியின்றி மண் அகழ்வை மேற்கொண்ட பெக்கோ கனரக வாகனம் ஒன்றையும் வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



கோழியனாறு, முள்ளாமுனை பிரதேசத்தில் மண் ஏற்றப்பட்ட நிலையில்   பொட்டியுடன் கூடிய இரண்டு உழவு இயந்திரங்களும், பெக்கோ வாகனம் ஒன்றையும் இவ் வாகனங்களின் சாரதிகளையும் நேற்று செவ்வாய்கிழமை மாலை (30ம் திகதி மாலை) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.


வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன, பி.புனிதகுமார், வை.வி.கஷீர், ஆர்.நந்தராஜபக்ச, எஸ்.மனோகரன், எம்.சாஜகான் ஆகிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இந்த கைப்பற்றும்  நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் சாரதிகளையும் மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று புதன்கிழமை காலை  ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக  வவுணதீவு பொலிஸ்  பொறுப்பதிகாரி தெரிவித்தார்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages