எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள் இருவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாவையும் இப்பகுதியை சேர்ந்த சஞ்சீவனீ என்பவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாவையும் கப்பமாக பெற முயற்சித்தமை வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களான, இம்மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்புக்காவலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் திருமதி எச்.ஐ.கே. காஹிங்கல உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.