இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வரும் ஆட்சி மாற்றத்துடன் பாராளுமன்ற உறுப்பினரான நான், மஹிந்த தரப்புடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இவை உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதையாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் முடிவே எனது முடிவுமாகும். எமது சமூகத்தின் பல்வேறு சிக்கல்களை அவிழ்க்க வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. நாம் மக்களின் பிரதி நிதிகளாகவே இங்கே இருக்கின்றோம். அவர்களின் ஆணையினைக் கொண்டே நாம் முடிவெடுப்போம்.
அத்துடன் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினைகள் போன்ற விடயங்கள் உள்ளடங்கலாக நமது இலங்கையில் ஒரே ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறைக்கு ஒரு முஸ்லிம் அரச அதிபரை நியமித்தல், அம்பாறை கரையோர மாவட்டம், தேர்தல் முறைமை மாற்றம், மாகாண சபை எல்லை நிர்ணயம் போன்றவற்றிற்குமான தீர்வுகளை சாதகமாக தீர்க்கக் கூடிய தலைமை ஒன்றினை நாம் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
எமது கட்சியின் தலைமை ஏனையவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நமது சமூகத்தின் தேவைகளை இலக்காக கொண்டு செயற்படுகிறது எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.