இந்தியா - டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 இற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
டெல்லி அருகில் உள்ள குர்கான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. நள்ளிரவு என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.
இதனையறிந்த 5-வது மாடியில் குடியிருந்த 32 வயதான ஸ்வாதி கார்க் என்ற பெண், சாதுரியமாக செயல்பட்டு அந்த குடியிருப்பில் இருந்தவர்களின் வீட்டை தட்டி அனைவரையும் எழுப்பினார்.
இதனால், அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி மேல் மாடிக்கு சென்று உயிர் தப்பினர்.
இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால் நீண்ட நேரமாகியும் ஸ்வாதி மேல் மாடிக்கு வரவில்லை. இதனையடுத்து தீ அணைப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அந்த பெண்ணை தேடிய தீயணைப்பு வீரர்கள் அப்போது, 10 ஆவது மாடியில் பூட்டப்பட்ட கதவுக்கு அருகே ஸ்வாதி இறந்த நிலையில் இருந்தார்.
அவர்; மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி குடியிருப்போர்; மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.