இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா, மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாய எம்.சலீம், மட்டக்களப்புதெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர்
எம்.சிவஞானம் மற்றும் விசவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
'இயற்கையுடன் இசைந்து பயணிப்போம்' என்பதற்கிணங்க தமக்குத் தேவையான விவசாய உற்பத்தியை தமது வீட்டு வளாகத்தினுள் செயற்கை பசளை கிருமி நாசினிகளை தவிர்த்து சேதனப் பசளைகளைக் கொண்டு உற்பத்திசெய்வதுடன் மேலதிகமாக உற்பத்தியாகும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் தமது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராசா தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பயிர்களுக்கு செயற்கை கிருமிநாசினிகளையும் செயற்கை பசளைகளையும் இடுவதன் விளைவாக மக்கள் பல நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.
பீடைத்தாக்கத்துக்கு பயன்படுத்தும் அதி சக்திவாய்ந்த நஞ்சுப் பொருட்கள் நாம் உண்ணும் இலைக்கறி, மரக்கறி உணவில் இலகுவில் கலந்துவிடும் சந்தர்பங்கள் அதிகம் உள்ளது. இதனை பலர் தெரிந்துகொள்வதில்லை அதேபோன்று இதைப்பற்றி பலர் தெரிந்தும் அதனை பொருட்படுத்தாமல் இருந்துவிடுகின்றார்கள்.
ஒரு தாய் தனக்குத் தெரியாமலே தன் குழந்தைக்கு விசத்தை ஊட்டுகிறாள் இந்த நிலை எதிர்காலத்தில் வெகு விரைவாக மாற்றமடையவேண்டும். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.