Breaking

Post Top Ad

Friday, October 5, 2018

எருவில் ஊரில் தன் மகளுக்கு இரும்பு கைம்பியால் சூடுவைத்த அகோரத்தாய்

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் ஊரில் பரபரப்பு சம்பவமாக  சூடுவைத்த சம்பவம்  பார்க்கப்படுகிறது

சில பெற்றோர் தமது குழந்தைகளிடத்தில் தமது வக்கிரபுத்திகளைஅகோர குணங்களையும் காட்டி எதிர்காலத்தில் அவர்களை இந்த நாட்டில் ஒரு குற்றவாளியாகவோ சமூகத்திற்கு எதிரானவர்களாகவோ உருவாக்கும்  வண்ணம் இந்த சமூகத்தில்  வாழ்ந்துதான் வருகின்றனர்.

தான்பெற்று வளர்த்த பிள்ளையினையே தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்;டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11வயதுடைய     சிறுமியே தாயினால் இரும்புக்கம்பினை காய்ச்சி சூடுகள் வைக்கப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எருவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றுவரும் குறித்த சிறுமி  பாடசாலைக்கு சென்றபோது காயங்களை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் குறித்த சிறுமியினை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் இரண்டு கைப்பகுதியிலும் வாய்ப்பகுதியில் இந்த சூடு வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages