இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள்,மற்றும் துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
கலாசார ரீதியான பயணமாக விஜயம் மேற்கொண்டுள்ளகுழுவினர் பலவேறு தரப்பினர்களையும் சந்தித்துவரும் வருகின்றனர்.
இதனிடையே அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று தமது அஞ்சலியை செலுத்தினர்.
ஈழ தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகிக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தியதாகவும் இந்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் மண்ணுக்கு கலாச்சார ரீதியான பயணமாக தாம் வந்திருந்தாலும் திலீபனுடைய நினைவிடத்திற்கு வந்திருப்பது உணர்வை வெளிப்படுத்துவதுடன் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு – சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிட்த்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.