Breaking

Post Top Ad

Saturday, October 27, 2018

மட்டக்களப்பில் மற்றுமோர் பிக்குவின் அட்டகசம்

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலையர்கட்டு கிராம சேவையாளர் பிரிவில் கரையோர நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் காலை 09.00 மணி முதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.



இதற்கு எ.டி.ஆர்.-எ நிறுவனத்தின் அனுசரனையும் கிடைக்கப்பெற்றது. மேலும் மாவட்ட செயலகம்,பனை அபிவிருத்திச் சபை, மத்திய நீர்பாசன திணைக்களம,; வனஜீவராசிகள் திணைக்களம் என்பன வனரோபா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்த வகையில் ஒரே நேரத்தில் ஒரு இலட்சம் பனை விதைகள் நடுகின்ற நிகழ்வு மாலையர் கட்டு கிராமத்தில் நடைபெற்றுக்கொன்டிருக்கும் போது 31ம் கிராம பகுதியில் இருந்து வருகை தந்த சில சகோதர இனத்தவரும் அவர்களுடன் வருகை தந்த மூன்று பௌத்த துறவிகளும் மேற்படி செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டம் என்றும் மட்டக்களப்புக்குரிய பகுதியினை உகன பிரதேசத்திற்குரிய பகுதி எனவும் கூறி பனை விதை நடவேண்டாம் என்றும் மீறி செயற்பட்டால்
நட்டால் பாரிய விளைவுகளை தாங்கள் சந்திக்க நேரிடும் என்றும் கிராம சேவகரின் வேலையினை இல்லத்தாக்குவதாகவும், கிராம சேவகரின் முதுகை அமர்த்தி நட்ட விதைகளை அகற்றுமாறும்,விதை நடப்பட்டால் தங்களையும் வெட்டி புதைப்போம் என்றும் உரத்த தொணியில் வற்புறுத்தியுள்ளனர். அதனால் குறித்த செயற்பாடு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இச்செயற்படானது மக்களை யானை தாக்குவதில் இருந்து பாதுகாப்பதற்கான நீண்ட கால உத்தியாகவும் மேற்கொள்ளப்பட்டது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages