Breaking

Post Top Ad

Sunday, October 14, 2018

மண்முனை மேற்க்கு நாவற்காடு நாமகள் வித்தியாலத்தில் ஆசிரியர் தின விழா

(ஜக்தீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வலயத்திற்க்குட்பட்ட மட்/ம.மே/நாவற்க்காடு நாமகள் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மிக சிறப்பாக நாவற்காடு நாமகள் வித்தியாலய நாமகள் மண்டபத்தில்   வௌ்ளிக்கிழமை வித்தியால மாணவர்கள​ை பழைய மாணவர்கள்இபெற்றோர்களால் சிறப்பாக  கொண்டாடப்பட்டது.  



இந்நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலய முதல்வர் திரு கோபாலப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்க்கு வலய வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ம.அகிலா அவர்கள் கலந்துகொண்டதோடு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.ம. ஹரிகர்ராஜ் மற்றும் மண்முனை மேற்க்கு மட்டக்களப்பு மேற்க்கு வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு சோமசுந்தரம் அவர்களும் சிறப்பித்தனர்

கொளரவ அதிதிகளாக நாவற்காடு நாமகள் வித்தியால பத்தாண்டுகள் கடந்த முதல்வர்,மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள் கலந்துகொண்டதோடு அழைப்பு அதிதிகளாக நாமகள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், சமூக மட்ட அமைப்புக்கள் பலரும் கலந்து கொண்டனர்

மேடைநிகழ்வுகாக அதிதிகள் வரவேற்ப்பு, மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம்,வரவேற்பு நடனம்,தலைமையுரை,அதிதிகள் கௌரவிப்பு, அதிதிகள் உரை, மற்றும் வித்தியாலய ஆசிரியர்களின் மேடைக்கலை நிகழ்வுகள் என கோலாகலமாக நிகழ்வு இடம்பெற்றது.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages