Breaking

Post Top Ad

Monday, October 1, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனும் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில்லை எனும் கருத்தினை சிலர் முன்வைத்து வருகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது, கூட்டமைப்பினர் அபிவிருத்திகளை செய்தவண்ணம் தமிழ் மக்களின் உரிமைக்காவும், உழைத்து வருகின்றனர். என மட்டு. மாநகர முதல்வர் - தி.சரவணபவன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில், ஞாயிற்றுக்கிழமை (30ஆம் திகதி)கருவேப்பங்கேணி எவர்கிறீன் விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை எமது தலைமைகள் ஒருபுறம் மேற்கொண்டுவரும் அதேவேளை, மறுபுறம் கட்சியின் அடுத்தகட்ட உறுப்பினர்களான நாம் எமது மக்களுக்குத் தேவையான பல அபிவிருத்திச் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும், உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாகவும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில்லை என்கின்ற விமர்சனத்தைப் பொய்ப்பிக்கும் விதமாக நாங்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பல அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் அவை அனைத்துமே வெளிப்படுத்தப்படுவதில்லை. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்வதில்லை என்கின்ற விமர்சனங்களும் எழுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இனி நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த எண்ணியுள்ளோம்.

எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் தலையாயப் பொறுப்பை எமது தலைமைகள் மேற்கொண்டுவருகின்ற அதேவேளை, மறுபுறம் கட்சியின் அடுத்தகட்ட உறுப்பினர்களான நாம் எமது மக்களுக்குத் தேவையான பல அபிவிருத்திச் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும், உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாகவும் துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில்லை என்கின்ற விமர்சனத்தைப் பொய்ப்பிக்கும் விதமாக நாங்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றோம். நாம் அபிவிருத்திகளை மேற்கொள்ளத் தேவையான நிதிகளைப்பெறும் வழிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று எமது பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அண்மையில் எமது பிரதேச அபிவிருத்தி சம்மந்தமாக நானும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கௌரவ பிரதமர் அவர்களை சந்தித்தோம். அப்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலதிக நிதியை வழங்குவதாக உறுதியளித்தார்.

அதன்படி தற்போது 200 மில்லியன் ரூபாய்களை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் நகரங்கள், கிராமங்கள் என வேறுபாடின்றி வீதிகள், பாலங்கள் அமைப்பதற்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு முன்மொழிவுகளை வழங்கி

பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து உரிமைக்காவும், அபிவிருத்திக்காகவும் பயணிக்க அனைவரும் முன்வரவேண்டும். எனவும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages