
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழவின் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணிய மூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இக் கூட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் முடிவடையாத அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8505 திட்டங்களில் 4180 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
நிறைவடையாத அனைத்துத் திட்டங்களையும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் விரைவாக நிறைவேற்றவேண்டும் எனவும் கூறப்பட்டதுடன், எதிர்காலம் மழைக்குரிய காலம ஆகையால் உட்கட்டமைப்பு வேலைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6505.78 மில்லியன் ரூபா நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.