Breaking

Post Top Ad

Thursday, October 4, 2018

ஏறாவூர் நகரை மின்னொளியூட்ட ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத்தினால் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான மின்விளக்குகள் நகர சபையிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் வர்த்தக நகரை இராப்பொழுதில் மின்னொளியூட்டக் கூடியதாக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக ஏறாவூர் நகர வர்த்தக சங்கத்தினால் நவீன மின் விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு அவை ஏறாவூர் நகர சபையிடம் கையளிக்க பட்டுள்ளதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்க தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் முஹம்மத் ஹினாயத்துல்லாஹ் வியாழன்று (04)தெரிவித்தார்.


ஏறாவூர் நகரை ஊடறுக்கும் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் பொருத்துவதற்காக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத்தின் நிதி அனுசரணையில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 04 இலட்சம் ரூபாய் பெறுமதியான 47 மின்விளக்குகள் ஏறாவூர் நகர சபை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.

ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஆர். சியாஹுல்ஹக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர மேயர் மேயர் இறம்ழான் அப்துல் வாஸித், நகர சபை உறுப்பினர்கள்,  ஏறாவூர் நகர வர்த்தகர் சங்க தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் முஹம்மத் ஹினாயத்துல்லாஹ், வர்தகர் சங்க நிருவாகச் செயலாளர் அப்துல் றஸாக் முஹம்மத் ஆஸிக், பொருளாளர் எஸ்.எம். நழீம் உட்பட வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages