Breaking

Post Top Ad

Thursday, October 18, 2018

பாசிக்குடாவில் 300 வெளிநாட்டவர்களின் மரதன் ஓட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது.


அந்தவகையில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சும், பாசிக்குடா மாலு மாலு நட்சத்திர விடுதியும் இணைந்து சிநேகபூர்வமான மரதன் ஓட்டப் போட்டியினை நேற்று (18) வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.



சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானா, பாசிக்குடா மாலு மாலு நட்சத்திர விடுதி தவிசாளர் சந்தலா விக்ரமசிங்க, பாசிக்குடா சுற்றுலாத் துறை முகாமையாளர் எம்.மாஹீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


சிநேகபூர்வமான மரதன் ஓட்டப் போட்டியானது கல்மடு விவேகாந்தா வித்தியாலம் முன்பாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, கல்மடு, மருதநகர், விநாயகபுரம், பேத்தாழை, கருங்காலிச்சோலை, பாசிக்குடா ஆகிய பகுதிகளில் மக்கள் செரிந்து வாழும் வீதிகளினூடாக சென்று பாசிக்குடா கடலின் ஊடாக பாசிக்குடா அமயா நட்சத்திர விடுதியை சென்றடைந்தது.


இதன்போது கடனா, பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த முன்னூறு பெண்கள் சிநேகபூர்வமான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது.


கடந்த 13ம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages