
இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள அசேலபுர – பிள்ளையாரடி எனுமிடத்தில் அன்றிரவு சனிக்கிழமை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விரைவு ரயில் அந்தப் பகுதியைக் கடக்கும்போது காட்டுக்குள் இருந்து புகையிரதப் பாதையைக் கடக்க முற்பட்ட காட்டு யானைகள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
இதன் காரணமாக விபத்துக்குள்ளான விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ள போதிலும் பயணிகள் எவருக்கும் பாரதூரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரவித்தனர்.
மேலும், ரயிலின் கொழும்பு நோக்கிய பயணமும் தடைப்பட்டது. பயணிகள் மாற்று போக்கு வரத்து எற்பாடுகளைச் செய்து கொண்டு சுயமாகவே பயணித்தனர்.
இதேவேளை விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் உடல்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கும் தடம்புரண்ட பெட்டிகளை பழுது பார்ப்பதற்கும் புகையிரதப் பாதையை சீர்செய்வதற்குமான பணிகளை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளும் வன இலாகா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.