ஐந்தாம்; ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்புஇ பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் செல்வன் பிரபாகர் நிருஸ்தீகன் 194 புள்ளிகளைப் பெற்று வலய மட்டத்தில் முதலாவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தனக்கும் தனது குடும்பத்திற்கும் படுவான்கரை பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையின் அதிபர் திரு.த.தம்பிராசா கற்பித்த ஆசிரியர் திருமதி.சுதாஜினி-ஜிலோஸ்குமார் அவர்களும் அம்மாணவனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்கழையும் தெரிவித்துக்கொண்டனர்.
இம்மாணவன் படுவான்கரை பிரதேசமான காக்காச்சிவட்டை தாமரைக்கேணி எனும் இடத்தில் ஆரம்ப வசிப்பிடமாகக் கொண்டவர்கள் கடந்த கால யுத்தத்தின் போது அவர்கள் இடம்பெயர்ந்து தற்போது எருவில் கிராமத்தில் வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.