Breaking

Post Top Ad

Friday, October 5, 2018

வாகரைபிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர்,முதியோர்தின நிகழ்வும், 'அரும்பு'-11 சிறப்புமலர் வெளியீடும்

(ஜெ.ஜெய்ஷிகன்)

கோறளைப்பற்றுவடக்கு வாகரைபிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர்,முதியோர்தின நிகழ்வும், 'அரும்பு'-11 சிறப்புமலர் வெளியீடும் 01.10.2018ஆம் திகதி அன்றுபி.ப 2.00 மணியளவில் மட்/ககு/ வாகரை மகாவித்தியால மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சி.கோணலிங்கம், தவிசாளர், கோறளைப்பற்று வடக்கு, வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், கோறளைப்பற்று வடக்கு கோட்டக்கல்விஅதிகாரி க.ஐயவதனன், வாகரை பொலிஸ்பொறுப்பதிகாரி எம்.என்.ஐ.திஸாநாயக்க,  திரு.த.திலிப்குமார், மற்றும் பாடசாலைஅதிபர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள்,முதியோர்கள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


'அரும்பு'-11 வது சிறப்புமலர் வெளியீடானது நூலாசிரியர் அ.அழகுராஜ், சிறுவர் உரிமைகள் மேம்பாடடு உத்தியோகத்தர் ஊடாக பிரதேசசெயலாளர் திரு.சு.ஹரன் அவர்களுக்கு கையளிக்கப்பட்டு ஏனய அதிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வுகளாக சிறுவர் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுதழ்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு, மாவட்டரீதியில் விளையாட்டில் தெரிவானவர்களுக்கான கௌரவிப்பு,சிறுவர்களின் கலைநிகழ்வுகள் என்பனவும்  இடம்பெற்றன 
















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages