Breaking

Post Top Ad

Tuesday, October 2, 2018

ஸ்ரீநேசனின் முயற்சியால் களுதாவளைக்கு 02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக களுதாவளை கொம்புச் சந்தி வீதிக்கு ரூபாய் 02 மில்லியன் நிதி இவ்வீதியின் புனரமைப்பிற்க்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களுதாவளை மக்களின் வேண்டுகோளிர்கமைவாக ஸ்ரீநேசன்அவர்களின் முயற்சியால் இந்த வீதிக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.பல வருடங்களாக இவ்வீதி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் குன்றும்,குழியுமாக காணப்பட்டது. இதனால் இவ்வீதியிநூடாக பயணம் செய்த  மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கினர்.



இதன் பலனாக இந்த வீதி புனரமைக்கப்பட்ட பின்னர் மக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்படும்.இதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages