Breaking

Post Top Ad

Thursday, September 13, 2018

கிராம உத்தியோகத்தர்களின் கடமையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனை உடன் நிறுத்தவேண்டும்! - ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான அலுவலர்களாக பக்கச் சார்பின்றி செயற்படும் கிராம உத்தியோகத்தர்களின் கடமையில் அரசியல் தலையீடு இடம்பெறுவருவதை உடன் நிறுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அவர்கள் நேற்று 13.09.2018ஆம் திகதி வியாழக்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.



அவ் அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச கடமையில் கிராம உத்தியோகத்தர்களின் வகிபாகம் குறித்து தெளிவில்லாத அரசியல்வாதிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், சமாதான அலுவலர்களாக செயற்படும் கிராம உத்தியோகத்தர்கள் எதுவித அரசியல் உரிமையும் அற்றவர்களாக உள்ளபோதிலும் கூட குறித்த சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நடவடிகைகளை விரிவுபடுத்துவதற்காகவும் தங்கள் செல்வாக்கை நிருபிப்பதையும் அடிப்படையாகக்கொண்டு கிராம உத்தியோகத்தர்களை பொதுமக்கள் மத்தியில் வைத்து கட்டளையிடுவதும், அமைச்சில் கடமையற்ற தண்டனைக்கு அனுப்பப்படுவீர்கள் என்றும் வாய்மூலமாக மிரட்டல் செய்வதும் இம் மாவட்டத்தில் அண்மையக் காலங்களில் அதிகரித்து வருகின்றதனை காணமுடிகின்றது.


மேலும் அரச காணிகளையும் வளங்களையும் கிராம மட்டத்தில் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களையே சாரும். அவ்வாறான கிராம உத்தியோகத்தர்கள் அரச காணிகளில் பொதுமக்கள் நலன்கருதியே அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற போதும் இவ்வாறான அரியல்வாதிகளின் தலையீட்டினை அவதானிக்க  முடிந்துள்ளது.


இவ்வாறான தலையீடுகள் கிராம உத்தியோகத்தர்களின் கடமைக்கு சவாலாக இருப்பதுடன் இந் நிலை எதிர்காலத்தில் தொடருமானால் மாவட்ட செயலாளர், கௌரவ உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்தவேன்டியேற்படும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம். என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages