Breaking

Post Top Ad

Monday, September 10, 2018

ஈச்சந்தீவு - கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மேம்படுத்தப்பட்ட கிராமிய வங்கி திறப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஈச்சந்தீவு - கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் மேம்படுத்தப்பட்ட கிராமிய வங்கி திங்கட்கிழமை (10.09.2018ஆம் திகதி) திறந்துவைக்கப்பட்டது.



கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எம்.சி.எம்.ஷெரிப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.



கூட்டுறவு சங்கத் தலைவர் என்.உருத்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான எம்.சி.எம்.ஷெரிப், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் போன்றோர் இந் நிகழ்வின்போது கிராம மக்கள் சிலருக்கு சுயதொழில் மேற்கொள்ளும் பொருட்டு வங்கிக் கடனுக்காக விண்ணப்பித்தோருக்கு  கடன்களையும் வழங்கிவைத்தனர்.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages