Breaking

Post Top Ad

Wednesday, September 19, 2018

யானைகள் மோதியதால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு -கொழும்பு ரயில் நேரடி போக்குவரத்து சேவையானது,  புதன்கிழமை காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


செவ்வாய்கிழமை (18ஆம் திகதி), ஹபரனை – பலுகஸ்வௌ ரயில் நிலையங்களுக்கு இடையில் 127 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் யானைகள் மோதியதால் இடம்பெற்ற விபத்தின் காரணமாக, குறித்த ரயில் பாதை  சரிசெய்யப்படாதமையினால், மட்டக்களப்பு –கொழும்பு ரயில் சேவைகள் செவ்வாய்கிழமை (18) ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.


இதன்காரணமாக, கொழும்பு – கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் மகோ ரயில் நிலையம் வரையிலும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் கல்ஓயா வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்ட நிலையில், புதன்கிழமை (19ஆம் திகதி) அதிகாலை 06.05 க்கு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலொன்றும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 06.10 க்கு ரயிலொன்றும், இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages