Breaking

Post Top Ad

Thursday, September 27, 2018

பலநூற்றுக்கனக்கான இளைஞர்களின் கண்ணீர்மல்க இடம்பெற்றது அனஸ்ட்ராஜின் இறுதி கிரியை

(ஜக்தீஸ்)

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலீஸ் பிரிவிற்க்குட்பட்ட  கிண்ணையடியை சேர்ந்த 23 வயதுடைய ஆனந்தராஜா அனஸ்ட்ராஜ்(கிழக்கு பலகலைக்கழக மாணவன்) கடந்த 24.09.2018 திங்கட்கிழமை இடம்பெற்ற உழவு இயந்திர  விபத்தில் சிக்கி பலத்த சிகிச்சைக்கு மத்தியில்  சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.



வாழைச்சேனை கிண்ணையடி விஸ்ணு ஆலய இறுதிநாள் தீர்த்த உற்சவத்திற்காக கல்குடா கடற்கரைக்கு  உழவு இயந்திரத்தில்  தீர்த்தம்  ஆடச்சென்ற அடியார்கள் தீர்த்தம் ஆடி  விட்டு ஆலயம் திரும்பிய  வேளையில் உழவு இயந்திரம் அதிவேகமாக சென்றதால் வாகன சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் உழவு இயந்திரத்தின் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உழவு இயந்திரத்தில் சென்ற 18 பேர்  விபத்துக்குள்ளாகி வாழைச்சேனை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு  பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவரான  கிழக்கு பல்கலைகழக மாணவனும்,தனியார் கம்பனி ஒன்றின் ஊழியருமான ஆனந்தராஜா அனஸ்ட்ராஜ் பலத்த காயத்திற்க்குள்ளாகி  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை  பெற்றுவந்த வேளையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரசாரதி வாழைச்சேனை பொலீசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரது இறுதி கிரியைகள் பல நூற்றுக்கணக்கான மக்கள் புடைசூழ  அன்னாரது வீட்டில் இடம்பெற்று பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கண்ணீர் மல்க சுன்னக்கேணி இந்து மைதானத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages