Breaking

Post Top Ad

Thursday, September 6, 2018

பிரதேசத்தின் எதிர்கால பாதக நிலையை விளங்கிக்கொண்டு குடிநீர் தொழிற்சாலை திட்டத்தை நிறுத்தவேண்டும் ! - கே. துரைராசசிங்கம்

நீர்வளத்தை சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது, இச் செயற்பாட்டை  பதிலாக மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி,  மத சாயங்கள் பூசப்படக் கூடாது.

என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.


நாளை வௌ்ளிக்கிழமை 07ம் திகதி இடம்பெறும் செயற்பாட்டு முடக்க போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு, இன, மத, மொழி கடந்து அனைத்து மக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

புல்லுமலையில் அமைக்கப்படவுள்ள போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவிருக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்


நீர்வளம் இது வரை இந்த ஒரு ஆபத்து நிலைக்கு உட்படவில்லை. ஆனால் குறித்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு இப்பிரதேசத்தின் நீர்வளத்திலும் அபாயக் குறியைக் காட்டுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.


குடிநீர் விநியோகம் என்ற செயற்பாடு அதிகளவான ஊற்றுப்பகுதியில் இருந்து செயற்படுத்துவதுதான் உகந்ததாகும். அங்கிருக்கின்ற ஊற்று வற்றாத ஊற்றாக இருக்கும். ஆனால்  சமதரையில் இத்தகைய வாய்ப்பு இல்லை.

இந்த விதத்தில் இந்த நிறுவனமும் இவ்வாறு நிலத்தடி நீரைக் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது நாளொன்றுக்கு 20000 லீட்டர் நீர்ப் பயன்பாடு அவர்கள் திட்டத்தில் உள்ளது.


இந்தச் செயற்பட்டின் போது தற்போதே நீர்வளம் குறைவாக உள்ள புல்லுமலைப் பிரதேசம் உடனடியாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை அப்பிரதேச குளங்கள் மற்றும் நீர்வளங்களும் பாதிப்புக்களாகுவதோடு முழு மாவட்டமும் இந்தப் பாதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த விடயத்தில் நிலத்தடி நீர்வளம் தொடர்பாக சுற்றுச் சுழல் திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கத் திணைக்களம்  ஆகிய நிறுவனங்கள் துல்லியமாகச் செயற்பட்டுள்ளன என்ற கூறமுடியாதுள்ளது.

இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களின் அதிருப்திகள் ஏற்கனவே பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் இது தொடர்பான கண்டங்களைத் தெரிவித்ததோடு குறித்த நிறுவனத்தினரை அழைத்து இதன் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி இச்செயற்பாட்டை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தாம் சட்டமுறையில் எல்லா அனுமதிகளையும் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு குறித்த நிறுவனம் அவர்களது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அவர்கள் ஒரு தொழில் நிறுவனம் என்ற ரீதியிலே அவர்களது வருமானம் தொடர்பில் சிந்திப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த வருமானமானது இந்தப்பிரதேசத்தை முற்றிலும் அதன் இயற்கைத் தண்மையில் இருந்து காவு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது எனகின்ற விடயத்தை இந்த நிறுவனத்தினர் மனங்கொள்ள வேண்டும்.

எனவே குறித்த நிறுவனத்தினர் தங்களுடைய செயற்பாட்டை மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை  ஏற்றுக் கொள்ள முடியாது. என  தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages