Breaking

Post Top Ad

Monday, September 3, 2018

சமூகசேவைகள் திணைக்கள முன்னைநாள் பணிப்பாளர் எம்.சி.அன்சார் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

(ஜெ.ஜெய்ஷிகன்)

மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள நலன்புரிச்சங்கத்தின் பிரியாவிடை நிகழ்வு கல்லடி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (30) தலைவர் இ.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக சிறந்த சேவைகளையாற்றி இடமாற்றலாகி கல்முனை மாநகர சபைக்கு ஆணையாளராகச் சென்ற எம்.சி.அன்சார் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்களான க.சிவகுமார், கு.குணரெட்ணம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  கே.பாக்கியராஜா, த.லிமலா, திருமதி.ந.தயாபரன், திருமதி.யாழினி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆற்றிய பணிகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் உத்தியோகத்தர்களால் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூகசேவைகள் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் பேனாட், தலைமையக சிரேஸ்ட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் அலியார், சமூகசேவைகள் உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மாவட்ட சமூகசேவைகள் அலுவலக உத்தியோகத்தர்கள், நலன்புரிச்சங்கத்தின் செயலாளர், இ.அன்டனிதாஸ், பொருளாளர் ஞானம் மற்றும் பிரதேச சமூக பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages