Breaking

Post Top Ad

Monday, September 17, 2018

கருவேப்பங்கேணி பிரதான வடிகாண் துப்பரவுப் பணி

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்களின் ஆலோசனையின் கீழ் மாநகரசபைக்குட்பட்ட பிரதான பெரிய வடிகாண்களைத் துப்பரவு செய்யும் செயற்பாட்டின் ஓர் கட்டமாக இன்றைய தினம் (17) கருவேப்பங்கேணி பிரதான வடிகாண் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றன.



பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வட்டார மற்றும் விகிதாசார மாநகர சபை உறுப்பினர்களின் நடவடிக்கையின் மூலம் மேற்படி செயற்பாடு மாநகரசபiயினால் மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது மாநகர சபை உறுப்பினர்களான வே.தவராஜா, கு.காந்தராஜா, து.மதன், த.இராஜேந்திரன் ஆகியோர் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment

Pages