Breaking

Post Top Ad

Monday, September 3, 2018

மனக்குழப்பத்தை தீர்த்த பின்னர் அரசியல் தெரிவுகளை விக்கி முன்வைக்கலாம்! – சுமந்திரன் தெரிவிப்பு

“முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தை சீர் செய்த பின்னர் அரசியல் தெரிவுகளை முன்வைக்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு முன்பாக 4 தெரிவுகள் இருப்பதாகக் கூறியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலமைச்சர் கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்கு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று கூறினார். இப்படி நடந்து கொள்பவர்கள் கட்சிக்கு எப்படித் தகுதியானவர்கள்?
முதலமைச்சர் முன்பாக 3 தெரிவுகள் இருந்தன. தற்போது 4 தெரிவுகளை முன்வைத்துள்ளார். நாளை 5 தெரிவுகளை முன்வைப்பார். இன்னும் சில நாட்களில் 10 தெரிவுகளை முன்வைப்பார். அவர் தனது மனக் குழப்பத்தைச் சீர்செய்த பின்னர் தெரிவுகளை முன்வைக்க வேண்டும்” – என்றார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages