Breaking

Post Top Ad

Tuesday, September 18, 2018

விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு ஆன்மீக கலாசார நிகழ்வுகள்

ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியை முன்னிட்டு ஆன்மீக, கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திங்கட்கிழமை (17.09.2018) இரவு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தiiமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஸ்வகர்ம கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.



கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பரப்பிரம்மமம் ஸ்ரீ விஸ்வகர்மா உடனுறை ஸ்ரீ காயத்திரி தேவிக்கு விசேட அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை இடம்பெற்றன.

தொடர்ந்து விஸ்வகர்மா கலாசார மண்டபத்தில் ஸ்ரீ விஸ்வப்பிம்ம வழிபாடும் அதன் சிறப்புக்களும் பற்றிய ஆன்மீக உரையை கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ஸ்ரீ பா. சிவலோகேஸ்வரக் குருக்கள் நிகழ்த்தினார்.

புராணங்களின்படி ஸ்ரீ விஸ்வப்பிரம்மாவால் பஞ்ச தொழில்களுக்கு அதிபதிகளாகிய பஞ்ச ரிஷிகளான மனு, மயா, துவட்டா, தேவசில்பி, விஸ்வக்ஞா ஆகிய பஞ்ச கம்மாளர்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து ஆசி வழங்கியதாக நம்பப்படும் தினத்தை நினைவு கூரும் நிகழ்வே ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தியாகும்.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages