Breaking

Post Top Ad

Monday, September 10, 2018

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரைத் தேடி வந்தவர்கள் அவர் இல்லாததால் வீட்டிலிருந்தவர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகர சபையின் திருச்செந்தூர் 12ஆம் வட்டார உறுப்பினர் சீனித்தம்பி ஜெயந்திரகுமாரைத்; தேடி ஞாயிற்றுக்கிழமை இரவு பொல்லு மற்றும் தடிகளுடன் அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டிலிருந்த மற்றொருவர் மீது தாக்குதல் நடாத்தி விட்டுத் தலைமறைவாகியது பற்றி பொலிஸில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு 09.08.2018 பொல்லு மற்றும் தடிகளுடன் திடீரென வீட்டிற்குள் நுழைந்த சுமார்  15 பேர் கொண்ட கும்பல் மாநாகர சபை உறுப்பினர் ஜெயந்திரகுமாரை எங்கே என்று விசாரித்துள்ளனர்.

அவர் வீட்டில் இல்லை என்று அறிந்ததும் மாநகர சபை உறுப்பினரின் வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர் பூபாலபிள்ளை இந்திரன் என்பவரின் தலையில் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான இந்திரன்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட காத்தான்குடி பொலிஸார் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் மேற்கொண்டு இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages