தேசிய சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை (05) காலை நடைபெறவுள்ளது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள ஏழு ( 7) எச்சரிக்கைக் கோபுரங்களும் ஒலிக்கப்பட்டு ஒத்திகை நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் முகமட் றியாஸ் தெரிவித்தார்.
இச் செயற்பாடு குறித்து மக்கள் யாரும் பீதியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணிமுதல் 12 மணிவரையில் நடைபெறும் இத் தேசிய சுனாமி ஒத்திகைப் பயிற்சியானது மக்களைத் தயார் படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
அனர்த்தப் பாதுகாப்பு அறிவூட்டல் செயற்பாடாக அமையும் இவ் ஒத்திகைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
Post Top Ad
Tuesday, September 4, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்தினை பயிற்சி
Tags
Batticaloa#
East#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
East,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.