Breaking

Post Top Ad

Friday, September 28, 2018

மாவீரர் குடும்பங்களுக்கு உலர்வுணவுப் பொதிகள் விநியோகம்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவீரர் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், மனைவிமார் ஆகியோருக்கு,  தியாகத் தீபம் திலீபனின் நினைவாக மக்கள் நலன் காப்பகத்தின்  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, மக்கள் நலன் காப்பகத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளையின் தலைமையில், நேற்று முன் தினம் (26) இடம்பெற்றது.

இதன்போது ,தலா ஒரு குடும்பத்துக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மக்கள் நலன் காப்பகத்தின வடக்கு, கிழக்கு இணைப்பாளர் வீரா, நிதிப் பொறுப்பாளர் விதுரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages