இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டடை விலக்குவதற்கு சென்ற தாய் அதில் ஒருவரின் கத்துக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 78 வயதான சிங்கப்புர கோகந்தர பகுதியில் வசிக்கும் வலிமுனி கருணாவதி என்பவரே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழந்த கருணாவதியின் இளைய மகன் தன்னுடைய காணியை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும்போது அங்கு சிலருடன் வந்த மூத்த மகன் இளைய மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இதன்போது இளைய மகன் கத்தியால் குத்த முயற்சித்த போது, இந்த சண்டையை கருணாவதி விலக்க வந்துள்ளார். இந்தநிலையில் கருணாவதியையும் மூத்த மகனையும் இளைய மகன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன்போது காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி கருணாவதி உயிரிழந்துள்ளார். இதேவேளை காயமடைந்த கருணாவதியின் மூத்தமகனும் இளைய மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post Top Ad
Sunday, September 2, 2018
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் தாய் பலி
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.