Breaking

Post Top Ad

Monday, September 17, 2018

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் புத்தக வெளியீடும்

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் புற்றுநோய் சிகிச்சை குறித்த புத்தக வெளியீடும் எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை (23.09.2018) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலையரங்கில் காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக  மட்டக்களப்பு புற்றுநோய் சங்கச் செயலாளரும் கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தருமான வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் கே. ஜெயகுமாரன்  அவர்களால் எழுதப்பட்ட புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுகளைக் கொண்ட 'நோய் நாடி.... நோய் முதல் நாடி....' எனும் நூலே வெளியிடப்படவுள்ளது.

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின்; ஏற்பாட்டில் இடம்பெறும் இப்புத்தக வெளியீட்டிற்கு சங்கத்தின் தலைவர் டொக்டர் என். சயளொலிபவன் (ளுயலயடழடiடியறயn) தலைமை வகிக்கின்றார்.


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பொது வைத்திய நிபுணருமான டொக்டர். வேல்முருகு விவேகானந்தராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் அவுஸ்தி;ரேலியாவில் பணிபுரியும் பொது வைத்தியர் கே. யோககாந்தி, மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. கே. பாஸ்கரன் மட்டக்களப்பு மாநகர முன்னாள் ஆணையாளரும், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் புற்றுநோய் சங்கம் ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினருமான கே.  அருணகிரிநாதன் அகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நூல் வெளியீட்டுரையை டொக்டர் ஜெயகுமாரன் அவர்கள் நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் இன மத பேதமின்றி கலந்து கொண்டு முடிந்தளவுக்கு பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு  பொதுமக்கள் பொது அமைப்பின் மூலம் அழைக்கப்படுகின்றனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages