Breaking

Post Top Ad

Sunday, September 16, 2018

சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு

சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைக் கைதிகளின் நலன்கருதி உறவினர்களுடனான ஒன்று கூடல் இன்று (16) சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை திணைக்களம் மற்றும் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து கடந்த வியாழக்கிழமை (06) முதல் கைதிகளுக்கு சர்வமத வழிபாடு, விளையாட்டுப் போட்டி, டெங்கு ஒழிப்பு சிரமதானம், உளவள ஆற்றுப்படுத்துதல், வைத்தியப் பரிசோதனை, இலவச சட்ட ஆலோசனை என்பன இடம்பெற்றன.


கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கைதிகளின் பிள்ளைகள் மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி;சரவணபவன், சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர், நலன்புரிச் சங்கத் தலைவர் வைத்தியக் கலாநிதி கே. கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் எஸ்.மகேஸ்வரன்,  மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M J F  லயன்ஸ் கழக்தின் தலைவர் ந. புஸ்பாகரன் மற்றும் காந்தி சேவா சங்கத் தலைவர் ஏ.செல்வேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வைத்தனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages