Breaking

Post Top Ad

Thursday, September 27, 2018

வவுணதீவு, இலுப்படிச்சேனையில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சினால் தையல் பயிற்சி நிலையம்  புதன்கிழமை 26.09.2018ஆம் திகதியன்று திறந்துவைக்கப்பட்டது.


இலுப்படிச்சேனை கிராமத்தில் அமைக்கப்பெற்ற இந்த பயிற்சி நிலையத்தினை கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.


மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில், யுத்தத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில்  இலுப்படிச்சேனை கிராமமும் ஒன்றாகும், இங்கு வறுமை நிலையிலுள்ள குடும்பங்களை பொருளாதார ரீதியில் உயர்த்தும் நோக்குடன் 16 தையல்இயந்திரங்கள் கொண்ட பயிற்சி நிலையம், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் பொருளாதார அமைச்சினால் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் டி.லோகநாதன், பிரதேச இணைப்பாளர் கே.மூர்த்தி, பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர், பிரதேச சபை உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages