தேசியப் பட்டியல் மூலம் அமைச்சுப் பதவி பெற்ற பைசர் முஸ்தபா ஜனநாயக தேர்தல் முறைமை குறித்து பேசுவது வேடிக்கையாகவுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய தனது கருத்துக்களை திங்கட்கிழமை 03.09.2018 வெளியிட்ட அவர், மேலும் தெரிவித்ததாவது,
சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அராஜக தேர்தல் முறைமையினை நியாயப்படுத்த பைசர் முஸ்தபா முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி சிறுபான்மையினருக்கு துரோகமிழைக்கும் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்,
தோல்வியுற்ற எல்லை நிர்ணய அறிக்கைக்கு மீண்டும் விளக்கமளித்து அதனை நியாயப்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு பைசர் முஸ்தபா முயல்கின்றார்,
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் புதிய தேர்தல் முறைமை என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருப்பதால் தான அதற்காக பாடுபடுகின்றேன் என பைசர் முஸ்தபா கூறுவாரேயாயின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஏனைய திட்டங்களுக்கு ஏன் முன்னுரிமையளிக்கப்படவில்லை,
மீண்டும் எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி புதிய முறைமையில் தேர்தலை நடத்த முற்படுவார்களாயின் அது தேர்தலை மேலும் பிற்பபோடும் சதித்திட்டமேயாகும்,
அதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் இடமளிக்கக்கூடாது .உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் போர்க் கொடி தூக்க வேண்டும்,
மீண்டும் பைசர் முஸ்தபா புதிய தேர்தல் முறைமையை கொண்டு வர முற்படுவாரேயானால் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்த சிறுபான்மை மக்கள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறைகூவல் விடுத்தார்.
Post Top Ad
Monday, September 3, 2018
Home
Batticaloa
Sri lanka
பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி சிறுபான்மையினருக்கு துரோகமிழைகிகிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா
பேரினவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி சிறுபான்மையினருக்கு துரோகமிழைகிகிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.