Breaking

Post Top Ad

Tuesday, September 18, 2018

மெத்தையைப் பிரித்துப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி! மக்களே அவதானம்!!

கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி காவற்துறையினர் நான்கு கிலோகிராம் கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.

நேற்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் குறித்த சம்பவம் தொடர்பில் சோதனை மேற்கொண்டபோது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே காவற்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த காவற்துறையினர் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.


இதன்போது குறித்த இரு வாகனங்களும் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வாகனங்களிலும் இரண்டு கிலோ வீதம் நான்கு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான மெத்தைகளை ஏற்றி வருவோர் அதனுள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடத்தக்கூடும் என்பதனால் மக்கள் இதுதொடர்பில் அவதானமாகச் செயற்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages