நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தின் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிளிலும் வீதிகளிலும் கைக்குழந்தைகளையும் சிறுவர்களையும் வைத்துக்கொண்டு ஊதுபத்தி விற்பனை, யாசகம், மடிப்பிச்சை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, பலர் குற்றஞ்சாட்டியுள்ளர்.
வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கயே, இவ்வாறு கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்பனை, யாசகம், மடிப்பிச்சை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அப்பகுதியில் கடமையில் இருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், வரியிறுப்பாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரிடம் முறையிட்டும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில், கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் பெண் ஒருவரிடம் வினாவிய போது,
நங்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் நல்லூர் உற்சவ காலத்தில் வியாபார நோக்குடன் வந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நல்லூரில், ஊதுபத்தி விற்று விட்டு, இரவு நடந்தே சென்று (சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம்) விடுதிக்குச் செல்வோமென, அவர் மேலும் தெரிவித்தார்.
எத்தனை பேர் வந்தீர்கள், யார் இங்கு கூட்டி வந்தார்கள் போன்ற மேலதிகக் கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை.
இவர்கள் ஒரு குழுவாகவே வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்களெனவும் அவர்களை அழைத்து வந்து, இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நபர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறிய முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post Top Ad
Tuesday, September 4, 2018
நல்லூர் வளாகத்தில் குழந்தைகளுடன் சுற்றும் பெண்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.