Breaking

Post Top Ad

Sunday, September 16, 2018

கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமும் பாற்குட பவனியும்.

மட்டக்களப்பு நகரின் மேற்கே வவுணதீவு பிரதேசத்திலுள்ள கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்  ஞாயிற்றுக்கிழமை 16ஆம் திகதி நடைபெற்றது


மட்டக்களப்பு  மாவட்டத்தில் பழைமை வாய்ந்த  கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்   ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை 16.09.2018 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 25.09.2018 செவ்வாய்கிழமை அதிகாலை 5,30 மணிக்கு நடைபெறும் தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

முதலாம் நாள் சடங்கு ஆரம்ப நிகழ்வின்போது, மட்டக்களப்பு ஈச்சந்தீவு  கண்ணகி ஆலயத்தில் இருந்து பால் குட பவனியாக பால் எடுத்துச் செல்லப்பட்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டதுடன், 108  சங்காபிசேக கிரியைகளும் நடைபெற்று ஆலய திருக்கதவு திறத்தலுடன் சடங்கு ஆரம்பமானது.


இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆண்களும் பெண்களும் பாற்குடங்களை தாங்கியவாறு இந்த பால்குட பவனியில் கலந்துகொண்டனர்.


இந்த முதலாம் நாள் சடங்கு உற்சவத்தின்போது பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages