Breaking

Post Top Ad

Thursday, September 13, 2018

புதுமண்டபத்தடி மூண்டாளுமடுவில் தற்போது அமைக்கும் கொங்கிரீட் வீதியின் நிலையை யார் கவனிப்பது? மக்கள் கேள்வி

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட புதுமண்டபத்தடி பாவற்கொடிச்சேனை பிரதானவீதியில் மூண்டாளுமடு எனுமிடத்தில் 12/09/2018 கொங்றீற் இடப்பட்டது.

இந்த வேலை நடைபெறும்போது இதனை எவருமே மேற்பார்வை செய்யவில்லை எனவும், சரியான முறையில் கம்பிகள் கட்டப்படவில்லை எனவும், இதற்கு இரு பக்கமும் சுமார் 2அடிக்கு கம்பிகள் இல்லை. சீமேன்ற் கலவையும் சரியான அளவில் இடப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்'துள்ளனர்.


குறித்த வேலை நடைபெறும்போது குறித்த நேரத்தில் வவுணதீவு பிரதேச சபையில் இருந்தோ பிரதேச செயலகத்தில் இருந்தோ எந்த அதிகரியும் இதனை பார்வை யிடாததன் காரணம் என்னவும் பொதுமக்கள் கேட்டுள்ளனர். 







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages