குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுள்ளதாவும் அவர் கூறினார்.
600 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட 'கண்ணியமாக வலுவூட்டல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திகான எம்.ஜே.எப்' நிலையத்தினை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை (01) மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிலையத்தின் அமைப்பாளரும் டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகருமான மெரில் ஜே.பெர்னாண்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு பிரதமர் மேலும் பேசுகையில் - கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயத்தினை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம். அதே போன்று சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்யவுள்ளோம்.
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பிற்கு வருவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனைக்கருத்திற்கொண்டு மத்தள விமான நிலையத்தின் புனரமைக்கப்புப்பணிகள் இவ்வருடஇறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு உல்லாசப்பயணிகள் வருவதற்கு இரண்டு அல்லது இரண்டரை மணித்தியாலங்களே செலவாகும். அதற்கு ஏதுவாக மட்டக்களப்பு விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக புனரமைத்துள்ளோம்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா மற்றும் பலாலிக்கும் உள்ளுர் விமான சேவை நடத்துவது தொடர்பாக இரண்டு உள்ளுர் சிவில் விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். இந்த திட்டங்க்ள ஊடாக கிழக்கு மாகாணத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று தகவல் தொழில் நுட்;பத் துறை மேம்படுத்தப்படும்.
மட்டக்களப்பு கல்முனை அம்பாறை போன்ற பகுதிகளில் அதிக இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு தொழில் வாய்பின்றி உள்ளனர். இவ்விளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதே சுற்றுலாத்துறை மேம்பாட்டின் நோக்கம் என்றார்.
ஒதுக்கப்பட்ட தனிநபர் மற்றும் சமூகங்களை கௌரவமானமுறையில் வலுவூட்டுவதன் ஊடாகவும் அறிவு ஆற்றல் விருத்தி, பராமரிப்பு மற்றும் மானிட சேவை ஊடாகவும் கிழக்கிற்கான மாற்றம் ஒன்றினைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்தநிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, கிரான், வாகரை, ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பயிற்சிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.