விருது வழங்கும் இந்நிகழ்வு புதன்கிழமை 05.09.2018 நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் அரங்கில் இடம்பெற்றது.
இது ஏறாவூர் நகர சபைக்குக் கிடைத்த இரண்டாவது கோப் குழு விருதாகும். 2015ஆம் ஆண்டும் இந்த விருது ஏறாவூர் நகரசபைக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
அரசியல் அலுவலங்களில் தங்களது வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் சிறந்த கணக்கீட்டு முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான விருதுகள் ஏறாவூர் நகர சபைக்குக் கிடைக்கப் பெறுவதன் ஊடாக தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் கோப் விருதை ஏறாவூர் நகர சபை பெற்றுக் கொள்கின்றது.
குறித்த கோப் குழுவின் விருதுகளை ஏறாவூர் நகர சபை பெற்றுக் கொண்டுள்ள 2015, மற்றும் 2016 ஆண்டு காலப்பகுதியி;ல் கிழக்கு மாகாண உள்ளுராட்சிக்கு முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பொறுப்பாக இருந்தார்.
அதேவேளை நஸீர் அஹமட் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏறாவூர் நகர சபையின் நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது என்று அவரது அரசியல் எதிரிகள் பிரச்சாரம் செய்து வந்ததோடு விசாரணை ஆணைக்குழுக்களையும் அனுப்பி நெருக்கடி கொடுத்ததாக முன்னாள் முதலமைச்சரின் இணைப்பாளர் அனிஸ்ரஸ் ஜெயராஜா தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.