Breaking

Post Top Ad

Thursday, September 6, 2018

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் கூரைமேலேறி, பிளேட் தகடினால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் கூரைமேல் ஏறி தனது கையில் பிளேட் தகடினால் வெட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேற்படி கைதி இன்று  06ஆம் திகதி பிற்பகல் சிறைச்சாலையிலுள்ள உயர்ந்த கட்டடத்தின் மேல் ஏறிக்கொண்டு நீதிபதி தன்னை பார்க்க வரவேண்டும் எனவும் தனக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியவண்ணம் தனது கைளிலும் கழுத்துப் பகுதியிலும் பிளேட் தகடு போன்ற கூரிய பொருள் ஒன்றினால்  வெட்டிக்கொண்டு மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த   பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகவும் திருட்டு சம்பவதத்தில்தொடர்புபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர் கடந்த காலத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுப்பிலிருந்து ஒருதடவை தப்பியோடி பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்  எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தன்னை பிடிப்பதற்கு யாராவது மேலேறி வருவார்களானால் கீழே குதித்து தற்கொலை செய்வேன் எனவும் இவர் எச்சரிக்கை  விடுத்துள்ளார்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages