Breaking

Post Top Ad

Friday, September 21, 2018

விவாதப் போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடம்

 (ஜெ.ஜெய்ஷிகன்)
மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட  பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விவாதப் போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது.

நேற்று முன்தினம் காலை மெதடிஸ்த்த திருச்சபை மற்றும் புகலிடம் நிறுவனங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாதப் போட்டி செங்கலடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. 'மாற்றுத்திறனாளிகள் பாடசாலைகளில் உள்வாங்கப்;படுகின்றனர்- மாற்றுத்திறனாளிகள் பாடசாலைகளில் உள்வாங்கப்;படவில்லை' என்ற தலைப்பில்  நடைபெற்ற விவாதப் போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி முதலாம் இடத்தையும் செங்கலடி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages