Breaking

Post Top Ad

Sunday, September 9, 2018

புலம்பெயர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் லண்டனில் அகால மரணம்

ஏறாவூரிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வசித்து வந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அப்துல் றஸ்ஸாக் என்பவர் அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 09.09.2018 மரணமடைந்துள்ளார் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

கடைசி வரை திடகாத்தரமான நிலையில் செயற்பட்டு வந்த அவர் கடந்த புதன்கிழமை 05.09.2018 அன்று அவரது மூளையில் நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டநிலையில் முடங்கினார்.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் இரத்தக் கசிவு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தபடியால் வைத்தியர்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அவர் மரணத்தைத் தழுவினார்.


ஏறாவூரைச் சேர்ந்த அப்துல் றஸ்ஸாக் யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் லண்டனுக்கு புலம்பெயர்ந்திருந்தார்.

லண்டன் Milton Keynes இல் வசித்து வந்த அவர், இலங்கையில் இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேரினவாத அடக்குமுறை குறித்தும் சர்வதேச மட்டத்தில் குரலெழுப்பி வந்ததோடு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துவதில் பங்கெடுத்திருந்தார்.

மர்ஹூம் அப்துல் ரஸாக் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம்  திங்கட்கிழமை (10.09.2018) காலை 11.30முதல் நண்பகல் 12.45 மணி வரை ஐக்கிய பிரித்தானியாவிலுள்ள  Islamic Center MK Trubys garden  Coffee Hall MK6 5HA  எனும் விலாசத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு நண்பகல் தொழுகையின் (லுஹர்) பின் பி.ப 3 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages