Breaking

Post Top Ad

Sunday, September 9, 2018

வெல்லாவெளியில் நடமாடும் இலவச மருத்துவசேவை

 (படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட  பொதுமக்களுக்கான மருத்துவசேவை இன்று (09) கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இவ்சேவையானது ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் சிரேஸ்ர ஆலோசகரும் பிரதேச அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான எஸ்.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதன வைத்திசாலையிலிருந்து  பத்துக்கும்மேற்பட்ட வைத்திய நிபுணர்களை வரவளைக்கப்பட்டு காலை 9.00 இருந்து பி.ப 2.00 மணி வரையும் பொதுமக்களின் நலன்கருதி இவ் சேவை இடம்பெற்றிருந்தது.

ஆரம்ப நிகழ்வின்போது பொதுமக்களுக்கான மருத்துவ ஆலோசணைகளும் வழற்கப்பட்டதோடு தங்களின் சேவைகளை ஆரம்பித்தனர் இதில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர்கள் வரையான ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages