Breaking

Post Top Ad

Sunday, September 2, 2018

பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவால் கல்குடாவில் விசேட தேவையுடைய பயிற்சி நிலையம் திறப்பு

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கல்குடாவில் விசேட தேவையுடைய பயிற்சி நிலையத்தை நேற்று திறந்து வைத்தார்.


கிழக்கு மாகாணத்தின்  அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் திட்டமிடப்பட்டுள்ளது.



விவசாயத்தினை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம். அதே போன்று சுற்றுலாத்துறையையும் விருத்தி செய்யவுள்ளோம்.

 கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்களை துரிதப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.

குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுள்ளதாவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

600 மில்லியன் ரூபா நிதியில் மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட 'கண்ணியமாக வலுவூட்டல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திகான எம்.ஜே.எப்" நிலையத்தினை  ரணில் விக்கிரமசிங்க நேற்று  மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் எம்.ஜே.எப் அறக்கட்டளை நிலையத்தின் அமைப்பாளரும் டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகருமான மெரில் ஜே.பெர்னாண்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages