Breaking

Post Top Ad

Thursday, September 6, 2018

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் வீட்டுத் திட்டம்

படுவான் எஸ்.நவா)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திக்கோடை, விவேகானந்தபுரம். றாணமடு கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட அரச காணிகளில் சுமார் 81  பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடுகள் வழங்கப்பட்டடு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (05) புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற்து பிரதம அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் சிரேஸ்ர ஆலோசகரும் பிரதேச அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் எஸ்.கணேசமூர்த்தி  போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் SOG 2020 போரதீவுப்பற்று இணைப்பாளர் எம்.கோகிலராஜ் ஐருஆ நிறுவனத்தின் தலைவர் றிசாம் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  N.டயஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

இதன்போது அனைவரும் உரையாற்றுகையில் மேலும் வீடு காணி இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்குவதாகவும் மற்றும் மின்சாரம் குடிநீர் பாதைகள் அமத்தல் யானைவேலி அமைத்தல் போன்ற பிரைச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டதோடு வீட்டு உரிமையாளர்  சில பயனாளிகளுக்கு ஆரம்பகட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்
































No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages