கார் விபத்தில் உயிரிழந்த பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் தந்தையின் இறுதிச் சடங்கில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்து நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷின் தந்தையின், 28ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் துபாயில் தலைமறைவாக வாழும் மதுஷ், தந்தையின் இறுதி சடங்கின்போது நாட்டிற்கு வருவார் என பாதுகாப்பு படைகள் விழிப்புடன் இருந்தன. எனினும் அவர் இலஙகைக்கு வரவில்லை.
தந்தையின் இறுதிச் சடங்கை தொழில்நுட்பத்தினூடாக மதுஷ் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாக, சி.சி.டி.வி கெமரா மூலம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், மதுஷின் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் மூலமே மலர் தூவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Monday, September 3, 2018
Home
Sri lanka
பிரபல பாதாள உலக குழு முக்கியஸ்தரின் தந்தையின் இறுதிச் சடங்கில் மலர் தூவிய ஹெலிக்கொப்டர்
பிரபல பாதாள உலக குழு முக்கியஸ்தரின் தந்தையின் இறுதிச் சடங்கில் மலர் தூவிய ஹெலிக்கொப்டர்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.