மட்டக்களப்பு – பதுளை வீதி பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரில் ஏற்கெனவே வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிர்வாகப் பயங்கரவாதம், இனவாத வன்மக் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுப்பதாக நீதி கோரும் மக்கள் குரல், முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.
ஏட்டிக்குப் போட்டியான இந்த ஹர்த்தாலுக்குரிய தினமாக இந்த இரு தரப்புக்களும் வெள்ளிக்கிழமையைத் (07.09.2018) தேர்ந்தெடுத்துள்ளன.
சமூகங்களுக்கிடையிலான வெறுப்புணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் இந்த ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தால் அழைப்பு அமைந்து விடுமோ என தாங்கள் அஞ்சுவதாகவும் சமூக நல நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் சார்பில் நீதி கோரும் சிவில் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு, குடியேறுவதற்கு, தொழில் செய்வதற்கு, சட்ட ரீதியாக தமது பூர்வீக நிலங்களை பெற்றுக்கொள்வதற்கு விதிக்கப்படும் தடைகள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் ஆயுத குற்றச்சாட்டு உள்ளிட்ட இனவாத வன்மம் பிரச்சாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கரி நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது. என தெரிவித்துள்ளனர்.
நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. என தமிழ் உணர்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினர் தங்களுடைய செயற்பாட்டை மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை மனிதத்துவப் பார்வையிலோ மதத்துவப் பார்வையிலோ ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் 07ம் திகதி வெள்ளிக் ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. என தமிழ் உணர்வாளர்களால் கடந்த 15 நாட்களுக்கு முன்னரே அறிவித்துள்ளனர்.
இந்த ஹர்த்தால் அழைப்புக்கள் ஏட்டிக்குப் போட்டியாகத்தான் நடைபெறுகின்றது என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. எனவும் சமூக நல நோக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
Post Top Ad
Thursday, September 6, 2018
Home
Batticaloa
East
Sri lanka
மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் நீதி கோரும் சிவில் அமைப்பு என்பன களத்தில்
மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியான ஹர்த்தாலுக்கு அழைப்பு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் நீதி கோரும் சிவில் அமைப்பு என்பன களத்தில்
Tags
Batticaloa#
East#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
East,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.