Breaking

Post Top Ad

Sunday, September 23, 2018

மழைக்காக ஏக்கத்துடன் காத்திருக்கு மண்முனை மேற்க்கு விவசாயிகள்..

(ஜக்தீஸ்)
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்க்குட்பட்ட பொதுமக்கள் மழையில்லாமல் தங்களது சிறுபோக  விவசாயம்  மழை இல்லாமல் காலம்  தாழ்த்தப்படுவதாக மண்முனை மேற்க்கு பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற  காலநிலையினால் வரட்சி ஏற்ப்பட்டு மழை இல்லாமையால்  விவசாயம் பதிக்கப்படுவதோடு தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உணவுகளெ பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


மழையில்லாமையால் வவுனதீவு, நாவற்காடு, மங்கிகட்டு, ஈச்சந்தீவு,விளாவெட்டுவான், சொறுவாமுனை,கரவெட்டி, நெல்லுச்சேனை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், நெல்லூர், கன்னங்குடா, காயன்மடு,மண்டபத்டி,குறிஞ்சாமுனை இவ்வாறான இன்னும்  பல கிராமங்ளை சேர்ந்த மக்களின் சிறுபோக வெள்ளாமை செய்கை காலம் தாழ்த்தப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் மழை இல்லாமல் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிப்பதாகவும்,புல்,தாவரங்கள்,நீரோடைகள் வறன்டு போவதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages